இந்தியா, ஏப்ரல் 16 -- ஏப்ரல் 16, 2025க்கு முன், இதே தேதியில் முந்தைய ஆண்டுகளில் விஜயகாந்த் நடித்த பரதன், கார்த்திக் நடித்த பொண்ணுமணி, பார்த்திபன் இயக்கி நடித்த உள்ளே வெளியே போன்ற படங்கள் வெளியாகியுள்ளன. ரசிகர்களை கவர்ந்து வரவேற்பை பெற்ற இந்த படங்கள் பற்றிய சுவாரஸ்ய விஷயங்களை பார்க்கலாம்

சபாபதி இயக்கத்தில் விஜயகாந்த், பானுப்பிரியா நடித்து ஆக்சன் திரைப்படமாக 1992இல் வந்த படம் பரதன், இந்தியில் சூப்பர் ஹிட்டான காயல் என்ற படத்தின் ரீமேக்காக உருவாகியிருந்த இந்த படம் தமிழிலு் 100 நாள்களுக்கு மேல் ஓடி ஹிட்டானது. இந்தி படத்தை அப்படியே ரீமேக் செய்யாமல் தமிழுக்கு ஏற்றார் போல், விஜயகாந்த் ரசிகர்களை கவரும் விதமாக பல மாற்றங்களுடன் படத்தை உருவாக்கியிருந்தார்கள். அந்த வகையில் படம் நன்கு ஒர்க் அவுட்டானது.

உதவி இயக்குநர்களுக்கு வாய்ப்பு கொடுப்பதில் எப்ப...