இந்தியா, மார்ச் 16 -- மார்ச் 16, 2025க்கு முன், இதே மார்ச் 16ஆம் தேதி சிவாஜி கணேசன் நடித்த கல்ட் கிளாசிக் படம், மறைந்த ஹீரோ மற்றும் ஹீரோயின் குணால், மோனல் ஆகியோர் நடித்து பட்டிதொட்டியெங்கும் பாடல்கள் ஒலித்த காதல் கதை, யுவுன் ஷங்கர் ராஜா இசையில் ரசிகர்கள் கவர்ந்த் காதல் கலந்த த்ரில்லர் படங்கள் முந்தைய ஆண்டுகளில் மார்ச் 16இல் வெளியாகியுள்ளன. அந்த படங்களை பற்றி சுவாரஸ்ய விஷயங்கள் உங்கள் பார்வைக்கு

பீம்சிங் இயக்கத்தில் சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், சாவித்திரி, தேவிகா, எம்.ஆர். ராதா, டி.எஸ். பாலையா உள்பட பலர் நடித்து பேமிலி படமாக 1961இல் வந்த படம் பாவ மன்னிப்பு. நடிகர் சந்திரிபாபு கதை எழுத, அவரது நடிப்பில் பீம்சிங் இயக்க அப்துல்லா என்ற பெயரில் இந்த படத்தின் சில காட்சிகள் எடுக்கப்பட்டது. ஆனால் அதில் இயக்குநர் பீம் சிங் திருப்தி அடையாமல் போக,...