இந்தியா, மார்ச் 6 -- மார்ச் 6, 2025க்கு முன், இதே மார்ச் 6ஆம் தேதியில் ரஜினிகாந்தின் Must watch Underrated படம், தமிழில் வெளியான வித்தியாசமான திகில் படம் போன்றவை வெளியாகியுள்ளன. மார்ச் 6ஆம் தேதி முந்தைய ஆண்டுகளில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்த படங்கள் உங்கள் பார்வைக்கு

தமிழ் சினிமாவின் ஹிட் காம்போவான எஸ்.பி. முத்துராமன் - சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கூட்டணியில் 1981இல் வெளியான ஆக்ச‌ன் த்ரில்லர் படம் கழுகு. ரொமாண்டிக் கதையாக தொடங்கி, போலி சாமியார், நரபலி என செல்லும் படத்தின் கதை வித்தியாசமாக இருக்கும் கழுகு படம் ரஜினிகாந்தின் Must watch Underrated படங்களில் ஒன்றாக உள்ளது. படத்தின் ரஜினிகாந்த் ஜோடியாக ரதி அக்னிஹோர்தி நடித்திருப்பார். ஒய்.ஜி. மகேந்திரன், தேங்காய் சீனிவாசன், வி.கே. ராமசாமி, சங்கிலி முருகன், சோ ராமசாமி உள்பட பலர் நடித்திருக்கும...