இந்தியா, ஏப்ரல் 22 -- ஏப்ரல் 22, 2025க்கு முன், இதே தேதியில் முந்தைய ஆண்டுகளில் விஜயகாந்த் நடித்த ஆக்சன் கலந்த காமெடி படமான தெற்கத்தி கள்ளன், மறைந்த இயக்குநர் கே.வி. ஆனந்த் அரசியல் த்ரில்லர் படமான கோ, சசிக்குமார் நடித்த பேமிலி படமான வெற்றிவேல் உள்பட சில படங்கள் வெளியாகியுள்ளன. இந்த படங்கள் பற்றிய சுவாரஸ்ய விஷயங்களை ரீவைண்ட் செய்து பார்க்கலாம்

பி. கலைமணி இயக்கத்தில் விஜயகாந்த், ராதிகா இணைந்து நடித்து காமெடி கலந்த ஆக்சன் பாணியில் உருவாகி 1988இல் வெளியான படம் தெற்கத்தி கள்ளன். படத்தில் திராமத்து இளைஞனாக குடிமியுடன் தோன்றும் விஜயகாந்த் லுக் வித்தியாசமாக இருந்ததுடன், படத்தில் காமெடியில் பட்டையை கிளப்பும் விதமாக நடித்திருப்பார். தெலுங்கு சூப்பர் ஹிட்டான பானுமதி காரி மோகுடு படத்தின் ரீமேக்காக உருவாகியிருந்த இந்த படம் விஜயகாந்த் ரசிகர்களை வெகுவா...