இந்தியா, பிப்ரவரி 23 -- பிப்ரவரி 23, 2025க்கு முன், இதே பிப்ரவரி 23ஆம் தேதியில் தமிழ் சினிமாவில் புதியதொரு ட்ரெண்டிங்கை உருவாக்கிய பருத்திவீரன், பீல் குட் படமான மொழி, கல்ட் கிளாசிக் காமெடி த்ரில்லர் படமான அரங்கேற்ற வேளை உள்பட சில முக்கிய படங்கள் வெளியாகியுள்ளன. அந்த வகையில் முந்தைய ஆண்டுகளில் பிப்ரவரி 23ஆம் தேதி வெளியான முக்கிய படங்கள் உங்கள் பார்வைக்கு

ஜெமினி கணேசன், சரோஜா தேவி, நாகேஷ், சிவகுமார், வரலட்சுமி உள்பட பலர் நடித்து கே. எஸ். கோபால கிருஷ்ணன் இயக்கத்தில் 1968இல் வெளியான குடும்ப படம் பணமா பாசமா. படத்தின் தலைப்புக்கு ஏற்றபடி பணத்துக்கும், பாசத்துக்கும் இடையிலான மோதல் மற்றும் போராட்டத்தை மையமாக கொண்டிருக்கும் படத்தின் கதை ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வெற்றி படமாக அமைந்தது. ரசிகர்களை கவர்ந்த சிறந்த கிளாசிக் பாடலான எல்.ஆர். ஈஸ்வரி ப...