இந்தியா, மார்ச் 4 -- மார்ச் 3, 2025க்கு முன், இதே மார்ச் 4ஆம் தேதியில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த சூப்பர் ஹிட் படம், நடிகர் ஜீவா கேரியரில் திருப்புமுனை ஏற்படுத்தி படம், தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் ரசிகர்களை கவர்ந்து சூப்பர் ஹிட்டான படங்கள் வெளியாகியுள்ளன. அந்த வகையில் மார்ச் 4ஆம் தேதி முந்தைய ஆண்டுகளில் வெளியான படங்கள் உங்கள் பார்வைக்கு ஆகிய படங்கள் இருந்து வருகின்றன.

டி. ராஜேந்தர் இயக்கி, இசையமைத்து நடித்த ரொமாண்டிக் ஆக்‌ஷன் திரைப்படமான உயிருள்ளவரை உஷா 1983இல் வெளியானது. இந்த படத்தில் சரிதா, நளினி என இரண்டு ஹீரோயின்கள் நடித்திருப்பார்கள். நளினியின் அறிமுக படமான உயிருள்ளவரை உஷா படத்தில் தான் டி. ராஜேந்தரும் ஹீரோவாக அறிமுகமானார். இந்த படத்தின் கதை ரஜினிகாந்துக்கு சொல்லப்பட்டதாக கூறப்படும் நிலையில், அவர் நடிக்க மற...