இந்தியா, மே 7 -- மே 7, 2025க்கு முன், இதே தேதியில் முந்தைய ஆண்டுகளில் சூர்யா நடித்த பேரழகன், ராகவா லாரன்ஸ் நடித்த இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம், எஸ்வி சேகர் நடித்த மணல் கயிறு போன்ற ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்ற படங்கள் வெளியாகியுள்ளன. இந்த படங்கள் பற்றிய சுவாரஸ்ய விஷயங்களை ரீவைண்ட் செய்து பார்க்கலாம்

சசி சங்கர் இயக்கத்தில் சூர்யா, ஜோதிகா, விவேக் பிரதான கதாபாத்திரத்தில் நடிக்க காமெடி ட்ராமா பாணியில் உருவாகி 2004இல் ரிலீசான படம் பேரழகன். சூர்யா வளர்ந்து வரும் ஹீரோவாக இருந்த போது வெளியாகி, அவருக்கு முக்கிய ஹிட் படமாக பேரழகன் படம் அமைந்திருந்தது.

படத்தில் சூர்யா, ஜோதிகா என இருவரும் டபுள் ஆக்டிங்கில் நடித்திருப்பார்கள். மலையாளத்தில் திலீப் நடித்து சூப்பர் ஹிட்டான குஞ்சுகூனன் படத்தின் ரீமேக்காக உருவாகியிருந்த பேரழகன் தமிழிலும் சூப்பர் ஹிட...