இந்தியா, ஏப்ரல் 21 -- ஏப்ரல் 21, 2025க்கு முன், இதே தேதியில் முந்தைய ஆண்டுகளில் சிவாஜி கணேசன் நடித்த தீர்ப்பு, வரலாற்று படமான யாத்திசை, அருண் விஜய் நடித்த ஓ மை டாக் ஆகிய படங்கள் வெளியாகியுள்ளன. இந்த படங்கள் பற்றிய சுவாரஸ்ய விஷயங்களை ரீவைண்ட் செய்து பார்க்கலாம்

ஆர். கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் சிவாஜி கணேசன், ஜெய்சங்கர், சுஜாதா உல்பட பலரும் நடித்த பேமிலி டிராமா பாணியில் உருவாகி 1982இல் வெளியான படம் தீர்ப்பு. மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான இதிகாசம் என்ற படத்தின் ரீமேக்காக தீர்ப்பு உருவாகியிருந்தது. இது சிவாஜி கணேசன் நடித்த 225வது படமாகும். சில்க் ஸ்மிதா ஒரு பாடலுக்கு நடனம் ஆடியிருப்பார்.

படத்திஸ் போலீஸ் எஸ்பி கதாபாத்திரத்தில் தோன்றியிருக்கும் சிவாஜி கணேசன், சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். சிவாஜி கணேசன் நடிப்பில் ஆபாச காட்சிகள், ரத்...