இந்தியா, மே 12 -- மே 12, 2025க்கு முன், இதே தேதியில் முந்தைய ஆண்டுகளில் உதயநிதி நடித்த சரவணன் இருக்க பயமேன், காமெடி நடிகர் அப்புக்குட்டி கதையின் நாயகனாக நடித்த அழகர்சாமியின் குதிரை, நடிகர் கரண் நடித்த கொக்கி, சத்யராஜ் நடித்த 6.2 போன்ற ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்ற படங்கள் வெளியாகியுள்ளன. இந்த படங்கள் பற்றிய சுவாரஸ்ய விஷயங்களை ரீவைண்ட் செய்து பார்க்கலாம்

எழில் இயக்கத்தில் உதயநிதி, ரெஜினா, சிருஷ்டி டாங்கே, சூரி, யோகிபாபு உள்பட பலர் நடித்து காமெடி படமாக உருவாகி 2017இல் ரிலீசான படம் சரவணன் இருக்க பயமேன். கலவையான விமர்சனங்களை பெற்ற இந்த படம் பாக்ஸ் ஆபிஸில் நல்ல வசூலை குவித்து ஹிட் படமாகவும் மாறியது. படத்தில் டி. இமான் இசையில் எம்புட்டு இருக்குது ஆசை என்ற பாடல் சூப்பர் ஹிட்டாகியது. அதேபோல் லாலா கடை சாந்தி என்ற குத்து பாடலும் வரவேற்பை பெற்றத...