Chennai, ஏப்ரல் 29 -- ஏப்ரல் 28, 2025க்கு முன், இதே தேதியில் முந்தைய ஆண்டுகளில் சிம்பு நடிப்பில் சூப்பர் ஹிட்டான வானம், உதயநிதி ஸ்டாலின் நடித்த மனிதன், கிளாசிக் ஹிட் படமான குறத்தி மகன் போன்ற படங்கள் வெளியாகியுள்ளன. இந்த படங்கள் பற்றிய சுவாரஸ்ய விஷயங்களை ரீவைண்ட் செய்து பார்க்கலாம்

கிரீஷ் இயக்கத்தில் சிம்பு, அனுஷ்கா, பரத், பிரகாஷ் ராஜ், சந்தானம், ஜாஸ்மின், சோனியா அகர்வால், சரண்யா பொன் வண்ணன் பிரதான கதாபாத்திரத்தில் நடித்து ஆக்சன் ட்ராமா பாணியில் உருவாகி 2011இல் வெளியான படம் வானம். தெலுங்கில் சூப்பர் ஹிட்டான வேதம் படத்தின் ரீமேக்காக உருவாகியிருந்த இந்த படம் தமிழிலும் நல்ல வரவேற்பை பெற்றது.

ஒரே நாளில் வெவ்வேறு கதாபாத்திரங்களுக்கு வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்கள் ஒரே புள்ளியில் இணையும் விதமாக அமைந்திருக்கும் படத்தின் கதை, விறுவிறுப்பான காட...