இந்தியா, மார்ச் 1 -- மார்ச் 1, 2025க்கு முன், இதே மார்ச் 1ஆம் தேதியில் தமிழ் சினிமாவில் மகிழ் திருமேணி இயக்கிய சூப்பர் ஹிட் த்ரில்லர் படமான தடம், ஓவியா கவர்ச்சியில் கிறங்கடித்த 90எம்எல், கிளாசிக் காதல் காவியமாக இருந்து வரும் லைலா மஞ்சு உள்பட சில படங்கள் வெளியாகியுள்ளன. அந்த வகையில் முந்தைய ஆண்டுகளில் மார்ச் 1ஆம் தேதி வெளியான முக்கிய படங்கள் உங்கள் பார்வைக்கு.

காதல் என்றாலே உதராணமாக கூறி வரும் லய்லா மஞ்சுனுன் காதல் கதையை அடிப்படையாக வைத்து லைலா மஞ்னு என்ற பெயரில் 1950இல் வெளியான இந்த படம் வரலாற்று பின்னணியான காதல் கதையாக அமைந்திருந்தது. எஃப். நாகூர் இயக்கிய இந்த படத்தில் டி.ஆர். மகாலிங்கம், எம்.வி. ராஜம்மா கதையின் நாயகர் நாயகிகளாக நடித்துள்ளார்கள். என்.எஸ். கிருஷ்ணன், டி.ஏ. மதுரம், வி.என். ஜானகி உள்பட பலர் நடித்திருக்கும் லைலா மஞ்னு படம் ...