இந்தியா, மே 11 -- மே 11, 2025க்கு முன், இதே தேதியில் முந்தைய ஆண்டுகளில் எம்ஜிஆர் இயக்கி நடிக்க உலகம் சுற்றும் வாலிபன், பிரபு நடித்த சின்ன வாத்தியார், சுந்தர் சி இயக்கிய கலகலப்பு, கீர்த்தி சுரேஷ் நடித்த நடிகையர் திலகம், விஷால் நடித்த இரும்புத்திரை போன்ற ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்ற படங்கள் வெளியாகியுள்ளன. இந்த படங்கள் பற்றிய சுவாரஸ்ய விஷயங்களை ரீவைண்ட் செய்து பார்க்கலாம்

ஆர்.எம். வீரப்பன் கதை, திரைக்கதை எழுத எம்ஜிஆர் இயக்கி நடித்து 1973இல் வெளியான சயின்ஸ் பிக்சன் ஆக்சன் திரைப்படம் உலகம் சுற்று வாலிபன். படத்தில் சந்திரகலா, மஞ்சுளா, லதா என மூன்று ஹீரோயின்கள் நடித்திருப்பார்கள்.

எம்ஜிஆர் ரசிகர்கள் மட்டுமல்லாமல் அனைத்து தரப்பினரையும் கவர்ந்த இந்த படம் 250 நாள்களுக்கு மேல் திரையரங்குகளில் ஓடியது. ஹைடெக் வண்ணத் திரைப்படம், ராயல் கதை, ரகசியத...