இந்தியா, மார்ச் 5 -- மார்ச் 5, 2025க்கு முன், இதே மார்ச் 5ஆம் தேதியில் கமல்ஹாசனின் கமர்ஷியல் விருந்தாக அமைந்த படம், விஜய்யின் ரெமாண்டிக் ஹிட் படம், சத்யராஜ் மற்றும் சரத்குமாரின் ஹிட் படங்கள் வெளியாகியுள்ளன. அந்த வகையில் மார்ச் 5ஆம் தேதி முந்தைய ஆண்டுகளில் வெளியான படங்கள் உங்கள் பார்வைக்கு

சோ ராமசாமி இயக்கி, நடித்து அரசியல் நய்யாண்டி படமாக 1971இல் வெளியான படம் முகமது பின் துக்ளக். இதே பெயரில் மேடையில் அரங்கேற்றப்பட்ட நாடகத்தை அடிப்படையாக வைத்து படம் உருவாகியிருந்தது. அப்போது ஆட்சியில் இருந்த திமுக, காங்கிரஸ் மற்றும் இந்திர காந்தியை தாக்கும் விதமாக பல்வேறு சர்ச்சை கருத்துகளும், காட்சிகளும் அமைந்திருந்த இந்த படம் கமர்ஷியில் ரீதியாகவும் வெற்றி பெற்றது. படத்தில் மனோரமா கதாபாத்திரம் அப்போதைய பிரதமர் இந்திர காந்தியை பிரதிபலிப்பதாக இருந்தது. தமி...