இந்தியா, மே 9 -- மே 9, 2025க்கு முன், இதே தேதியில் முந்தைய ஆண்டுகளில் உலகநாயகன் கமல்ஹாசனின் மெகா ஹிட் படமான இந்தியன், தளபதி விஜய் நடித்த லவ் டுடே, நவரச நாயகன் கார்த்திக் நடித்த பிஸ்தா, கிருஷ்ணா நடித்த யாமிருக்க பயமே போன்ற படங்கள் வெளியாகியுள்ளன. இந்த படங்கள் பற்றிய சுவாரஸ்ய விஷயங்களை ரீவைண்ட் செய்து பார்க்கலாம்

பிரமாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன், மனிஷா கொய்ராலா, ஊர்மிளா மட்னோகர், கவுண்டமணி, செந்தில் உள்பட பலர் நடித்து ஆக்சன் த்ரில்லர் படமாக 1996இல் வெளியாகி மெகா ஹிட்டான படம் இந்தியன். கமல்ஹாசனுக்கு மெகா ஹிட்டுடன், 90ஸ் காலகட்டத்தில் கோடிகளில் வசூலை அள்ளிய படமாக இந்தியன் உள்ளது.

தந்தை,மகன் என இரு வேடங்களில் நடித்திருக்கும் கமல்ஹாசன் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் இந்திய தேசிய ராணுவத்தின் வீரர், சுதந்திரபோராட்ட தியாகி, இந்தியன் ...