இந்தியா, மார்ச் 13 -- மார்ச் 13, 2025க்கு முன், இதே மார்ச் 13ஆம் தேதி எம்ஜிஆர் - சரோஜா தேவி நடித்த அட்டர் பிளாப் படம், பிரகாஷ் ராஜ் அற்புதமான நடிப்பில் தேசிய விருது வென்ற படம் ஆகியவை வெளியாகியுள்ளது. அந்த வகையில் மார்ச் 12இல் முந்தைய ஆண்டுகளில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்த படங்கள் உங்கள் பார்வைக்கு

எம்ஜஆர் - சரோஜா தேவி ஜோடியாக நடித்து எம். நடேசன் இயக்கத்தில் 1964இல் வெளியான படம் என் கடமை. படத்தில் கே. பாலாஜி, எம்.என். நம்பியார், எம்.ஆர். ராதா, நாகேஷ், எல். விஜயலட்சுமி, மனோரமா, சி.கே. சரஸ்வதி உள்பட பலரும் நடித்துள்ளார்.

எம்ஜிஆர் போலீஸ் வேடத்தில் நடித்திருக்கும் இந்த படம் மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியாகி தோல்வியை தழுவியது. வழக்கமான எம்ஜிஆர் படங்களில் இடம்பிடித்திருக்கும் காதல், ஆக்சன், செண்டிமெண்ட் காட்சிகள் என அனைத்தும் இடம்பிடித்திருந்தப...