Chennai, ஏப்ரல் 28 -- ஏப்ரல் 28, 2025க்கு முன், இதே தேதியில் முந்தைய ஆண்டுகளில் உலக சினிமா ரசிகர்களை இந்திய சினிமா பக்கம் திரும்பி பார்க்க வைத்த பாகுபலி 2 வெளியாகியுள்ளது. இதுதவிர அதேமனிதன் என்கிற திகில் படம் ஒன்றும் வெளியாகியுள்ளது. ஏப்ரல் 28ஆம் தேதி முந்தைய ஆண்டுகளில் ரிலீசான இந்த படங்கள் பற்றிய சுவாரஸ்ய விஷயங்களை ரீவைண்ட் செய்து பார்க்கலாம்

எஸ்.எஸ். ராஜமெளலி இயக்கத்தில் பீரியட் ஆக்சன் படமாக 2017இல் வெளியாகி உலக அளவில் பேசப்பட்ட படம் பாகுபலி 2. பாகுபலி சீரிஸ் படங்களில் இரண்டாம் பாகமாகவும், முதல் பாகத்தில் பிரதான கதாபாத்திரமான பாகுபலியை மற்றொரு முக்கிய கதாபாத்திரமான கட்டப்பா குத்தி கொலை செய்யும் காட்சியுடன் முடிவடைந்த, அதற்கான பதிலை சொல்லும் விதமாகவும் இரண்டாம் பாகம் உருவாகியிருந்தது.

தெலுங்கு, தமிழ் ஆகிய இரு மொழிகளில் படமாக்கப்பட்...