இந்தியா, மே 4 -- மே 4, 2025க்கு முன், இதே தேதியில் முந்தைய ஆண்டுகளில் சத்யராஜ் நடித்த பெரியாரின் வாழ்க்கை வரலாறு திரைப்படமான பெரியார், புதுமுகங்கள் நடித்த வழக்கு எண் 18/9, கெளதம் கார்த்திக் நடித்த இருட்டு அறையில் முரட்டு குத்து ஆகிய படங்கள் வெளியாகியுள்ளன. இந்த படங்கள் பற்றிய சுவாரஸ்ய விஷயங்களை ரீவைண்ட் செய்து பார்க்கலாம்

தமிழ்நாடு மக்களால் கொண்டாடப்படும் ஈ.வெ. ராமசாமி, தந்தை பெரியாரின் வாழ்க்கை வரலாற்று படமான பெரியார் 2007இல் வெளியானது. சத்யராஜ் பெரியாராக நடித்த இந்த படத்தை ஞான ராஜசேகரன் இயக்கியிருந்தார். படம் வெளியானபோது தமிழ்நாட்டை ஆட்சி செய்த முதலமைச்சரான மு. கருணாநிதி, அரசின் சார்பில் பட தயாரிப்புக்கு நிதி அளிக்கப்பட்டது.

சந்திரசேகர், ஜோதிர்மயி, குஷ்பூ, ஸ்வர்ணமால்யா உள்பட பலரும் இந்த படத்தில் நடித்துள்ளார்கள். பாரதியார் வாழ்ககை வர...