இந்தியா, மே 15 -- மே 15, 2025க்கு முன், இதே தேதியில் முந்தைய ஆண்டுகளில் அஜித்குமார் வளர்ந்து வரும் ஹீரோவாக இருந்தபோது அவருக்கு சூப்பர் ஹிட் கொடுத்த அவள் வருவாளா, கார்த்திக் - மீனா நடிப்பில் ஹிட் படமான அரிச்சந்திரா, ஆர்யா நடித்த சர்வம் போன்ற படங்கள் வெளியாகியுள்ளன. இந்த படங்கள் பற்றிய சுவாரஸ்ய விஷயங்களை ரீவைண்ட் செய்து பார்க்கலாம்

ராஜ்கபூர் இயக்கத்தில் அஜித்குமார், சிம்ரன், பப்லு ப்ருத்விராஜ், கவுண்டமணி, செந்தில், சுஜாதா உள்பட பலர் நடித்து காதல் கலந்த ட்ராமா பாணியில் உருவாகி 1998இல் ரிலீசான படம் அவள் வருவாளா. தெலுங்கில் சூப்பர் ஹிட்டான பெல்லி படத்தின் ரீமேக்காக உருவாகியிருந்த இந்த படம் வளர்ந்து வரும் ஹீரோவாக இருந்த அஜித்குமாருக்கு கமர்ஷியல் ஹிட் கொடுத்ததோடு, அவரது சினிமா வாழ்க்கையிலும் திருப்புமுனை ஏற்படுத்திய படமாக அமைந்திருந்தது.

அஜி...