இந்தியா, ஏப்ரல் 18 -- ஏப்ரல் 18, 2025க்கு முன், இதே தேதியில் முந்தைய ஆண்டுகளில் வடிவேலு கதையின் நாயகனாக இரட்டை வேடங்களில் நடித்த தெனாலி ராமன், சந்தானம், கஞ்சா கருப்பு கதையின் நாயகர்களாக நடித்த அறை எண் 305ல் கடவுள், கார்த்திக் நடித்த நாடோடி தென்றல் போன்ற படங்கள் வெளியாகியுள்ளன. ரசிகர்களை கவர்ந்து வரவேற்பை பெற்ற இந்த படங்கள் பற்றி ரீவைண்ட் செய்து பார்க்கலாம்

இயக்குநர் இமயம் பாரதிராஜா இயக்கத்தில் கார்த்திக், ரஞ்சிதா நடிப்பில் பீரியட் ரெமாண்டிக் படமாக உருவாகி 1992இல் வெளியான படம் நாடோடி தென்றல். பிரிட்டீஷ் மகராஜா ஆட்சி காலத்தில் நடக்கும் கதையான இந்த படம் பிரிட்டீஷ் மகராஜா, தங்க பட்டறை தொழிலாளியாக வரும் கார்த்திக், நாடோடியாக இருந்து வரும் ரஞ்சிதா, மாவட்டர் கலெக்டர் தங்கை ஆகியோருக்கு இடையிலான முக்கோண காதல் கதையை மையப்படுத்தி படத்தின் கதை அமை...