இந்தியா, பிப்ரவரி 7 -- இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதை கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் பதாகை ஏந்தி திமுக எம்பிக்கள் போராட்டம் நடத்தினர்.

இது தொடர்பாக திமுக சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், தமிழ்நாட்டு மீனவர்கள் தொடர்ந்து இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவதும் கைது செய்யப்படுவதும் அவர்களின் படகுகள் இலங்கை அதிகாரிகளால் கைப்பற்றப்படுவதும் வாடிக்கையான நிகழ்வாகிவிட்ட நிலையில் தற்போது இலங்கை சிறையில் உள்ள தமிழ்நாட்டை சேர்ந்த 97 மீனவர்களையும் பறிமுதல் செய்யப்பட்ட 216 மீன்பிடி படகுகளையும் விடுவிக்க கோரியும், மீனவர்கள் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு வேண்டும் என்பதை வலியுறுத்தியும் மக்களைவையில் இவ்விவகாரத்தை விவாதத்திற்கு எடுக்குமாறு திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி எம்.பி அவர்கள் அவையில் நேரமில்லா நேரத...