இந்தியா, ஏப்ரல் 25 -- மயோனைஸ் என்பது முட்டை, வினிகர் மற்றும் எண்ணெய் ஆகியவற்றிலிருந்து தயாரிக்கப்படும் ஒரு கிரீமி உணவு பொருள் ஆகும். இது பல சமையலறைகளில் ஒரு முக்கிய அங்கமாகும், மேலும் இது பெரும்பாலும் சாண்ட்விச்கள், சாலடுகள் மற்றும் டிப்ஸுக்கு சுவை சேர்க்கப் பயன்படுகிறது. இது இந்த உணவுகளின் சுவையை அதிகரிக்க பயன்படுகிறது. ஆனால் இத்தனை ருசியை கொடுக்கும் இந்த மயோனைஸ் ஆரோக்கியத்திற்கு அவ்வளவு நல்லதல்ல.

மேலும் படிக்க | 'மயோனைஸைக்கு ஓராண்டு காலம் தடை' - உற்பத்தி செய்ய சேமிக்க விற்கவும் தமிழ்நாடு அரசு தடைவிதிப்பு!

பொதுவாக மயோனைஸ் கலோரிகள் நிறைந்தது, அதாவது சிறிய அளவில் அதிக கலோரிகளைக் கொண்டுள்ளது. ஒரு டீஸ்பூன் மயோனைஸ் மட்டும் சுமார் 90 கலோரிகளை கொண்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. குறிப்பாக நீங்கள் அதை அதிகமாகப் பயன்படுத்தினால் இது விரைவாகச் சே...