இந்தியா, ஏப்ரல் 27 -- எம்-சாண்டு, பி-சாண்டு, ஜல்லி விலை ரூ.1000 குறைக்கப்படுவதாக அமைச்சர் துரைமுருகன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு உள்ளது.

தலைமைச் செயலகத்தில் நீர்வளம் மற்றும் கனிமவளங்கள் துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் கல்குவாரி, கிரஷர்கள் மற்றும் லாரி உரிமையாளர்கள் சங்கம் அளித்துள்ள கோரிக்கைகள் தொடர்பான கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் எம்-சாண்டு, பி-சாண்டு மற்றும் ஜல்லி ஆகியவற்றின் விலையை ரூ.1000 குறைத்து விற்பனை செய்யவும், சாதாரண கற்களுக்கான சீனியரேஜ் தொகையை மெட்ரிக் டன்னுக்கு ரூ.33 ஆக நிர்ணயிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் படிக்க:- 'மத்திய அரசு பணிகளில் சேருவோருக்கு தமிழக அரசே முட்டுக்கட்டைப் போடுவதா?' விளாசும் அன்புமணி ராமதாஸ்!

கல்குவாரி, கிரஷர் மற்றும் லாரி உரிமையாளர்கள் சங்கம், 25.04.2025 அ...