இந்தியா, மே 8 -- தமிழ்நாட்டில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (மே 08) வெளியானது. தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் வெளியிட்டார். தேர்வு முடிவுகளை, results.digilocker.gov.in, tnresults.nic.in, dge.tn.gov.in ஆகிய அதிகாரப்பூர்வ இணைய தளங்கள் மூலம் மாணவர்கள் தெரிந்து கொள்ளலாம்.

12ம் வகுப்பு பொதுத் தேர்வில் இந்தாண்டு தேர்ச்சி சதவிகிதம் 95.03% ஆக உள்ளது. மொத்தம் 7,92,494 மாணவர்கள் தேர்வு எழுதியதில், 7,53,142 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்தாண்டும் மாணவர்களைவிட மாணவிகளே அதிகளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இந்தாண்டு அரசுப் பள்ளிகள் 91.94 சதவிதமும், அரசு உதவி பெறும் பள்ளிகள் 95.71 சதவிதமும், தனியார் சுயநிதிப் பள்ளிகள் 98.88 சதவிதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

மேலும் படிக்க | தமிழக பொறியியல் கல்லூரிகளுக்கான மாண...