இந்தியா, மார்ச் 15 -- தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் சுகாதாரத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதி போதுமானதா, அதன் மீது கொடுக்கப்படும் கவனம் சரியானதா என்பதை கல்பாக்கம் மருத்துவர் புகழேந்தி விவரிக்கிறார்.

இந்தாண்டு சுகாதாரத்துறைக்காக 21,906 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது கடந்தாண்டைவிட 8 சதவீதம் அதிகம். ஆனால் 1708 கோடி கடந்தாண்டைவிட அதிகம் இருந்தபோதும், பணவீக்கத்தை கணக்கில்கொண்டு, போதிய அளவு நிதி சுகாதாரத் துறைக்கு ஒதுக்கப்பட்டுள்ளதா என்பதை கண்டுபிடிக்க முடியும். அதனுடன் ஒப்பிடும்போது குறைவாக உள்ளது. தமிழக அரசின் பொருளாதார குழுவில் இடம்பெற்றுள்ள ஜீன் டிரீஸே அது குறைவு என்று கூறுகிறார். இந்த நிதி எப்படி செலவிடப்படுகிறது என்று பார்க்கவேண்டும்.

இந்த நிதி போதுமானதல்ல, இந்தியாவிலும் இதே நிலைதான் உள்ளது. மொத்த நிதியில் புதிதாக கட்டிடங்கள் கட்...