இந்தியா, மார்ச் 14 -- 2025-26ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இன்று காலை சட்டப் பேரவையில் தாக்கல் செய்கிறார்.

2023 ஆம் ஆண்டில் நிதியமைச்சராக பதவியேற்ற பிறகு தென்னரசுவின் இரண்டாவது பட்ஜெட் தாக்கல் இதுவாகும். 2021ஆம் ஆண்டு பொறுப்பேற்ற திமுக தலைமையிலான அரசின் 4வது பட்ஜெட் இதுவாகும். நாளைய தினம் வேளாண் பட்ஜெட்டை வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் தாக்கல் செய்கிறார். பட்ஜெட் மீதான விவாதம் மார்ச் 17-ம் தேதி தொடங்குகிறது.

இதனிடையே நேற்றைய தினம் தமிழ்நாடு அரசின் சார்பில் பொருளாதார ஆய்வறிக்கை வெளியிடப்பட்டது. தமிழ்நாடு, 2023-24ஆம் ஆண்டில் தேசிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) 9.21% பங்களித்துள்ளது. 2023-24இல் மாநில உள்நாட்டு உற்பத்தியானது (ஜிஎஸ்டிபி) நடப்பு விலையில் ரூ.27.22 லட்சம் ...