இந்தியா, மார்ச் 14 -- சம்க்ர சிக்‌ஷா அபியான் திட்டத்திற்காக 2152 கோடி ரூபாயை ஒன்றிய அரசு தமிழ்நாட்டுக்கு விடுவிக்காமல் வஞ்சித்து வரும் நிலையில், அத்தொகையை தமிழ்நாடு அரசே ஏற்கும் என நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்து உள்ளார்.

நிதிநிலை அறிக்கையில், பள்ளிக்கல்விதுறை தொடர்பாக அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்புகளை வெளியிட்டார். அதில், ஒருங்கிணைந்த பள்ளி கல்வித்திட்டமான சமக்ர சிக்‌ஷா திட்டத்தின் கீழ் பல்வேறு மாணவர் நலத்திட்டங்களை கடந்த 7 ஆண்டுகளாக மாநில அரசு சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. எண்ணும் எழுத்தும் திட்டம், மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கான சிறப்பு கல்வி, தொலைதூர குடியிருப்புகளில் இருந்து மாணவர்கள் வந்து செல்ல போக்குவரத்து படி, ஆசிரியர்களுக்கான ஊதியம், உயர்கல்வி வழிகாட்டி, கலைத்திருவிழா, கல்வி சுற்றுலா, இணைய வசதி உள்ளிட்ட பல திட்டங...