இந்தியா, மார்ச் 14 -- இதுவரை மகளிர் உரிமை தொகை பெறாத தகுதி வாய்ந்த இல்லத்தரசிகள் விண்ணப்பிக்க உரிய வாய்ப்புகள் விரைவில் வழங்கப்படும் என நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்து உள்ளார்.

2025-26ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். இந்த நிலையில் டாஸ்மாக் நிறுவனத்தில் ஆயிரம் கோடி முறைகேடு புகார் தொடர்பாக விவாதிக்க கோரி அதிமுக எம்.எல்.ஏக்கள் அமளியில் ஈடுபட்டு வெளிநடப்பு செய்தனர்.

தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கி உள்ளது. 2023 ஆம் ஆண்டில் நிதியமைச்சராக பதவியேற்ற பிறகு தென்னரசுவின் இரண்டாவது பட்ஜெட் தாக்கல் இதுவாகும். 2021ஆம் ஆண்டு பொறுப்பேற்ற திமுக தலைமையிலான அரசின் 4வது பட்ஜெட் இதுவாகும். நாளைய தினம் வேளாண் பட்ஜெட்டை வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் தாக்கல் ச...