இந்தியா, மார்ச் 13 -- தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை நாளை வெளியாக உள்ள நிலையில், இந்திய ரூபாயை குறிக்கும் ' Rs.' என்ற இலச்சினைக்கு பதிலாக 'ரூ' என்ற தமிழ் எழுத்து இடம்பெற்று உள்ளது விவாதத்தை கிளப்பி உள்ளது.

2025-2026ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கை தமிழ்நாடு சட்டப்பேரவையில் நாளை வெளியிடப்படுகிறது. காலை 9.30 மணிக்கு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பட்ஜெட் தாக்கல் செய்ய உள்ளார்.

இந்த நிலையில் தமிழ்நாட்டின் வளர்ச்சி அடுத்த ஓராண்டுக்கு எப்படி இருக்கும் என்பது குறித்து விளக்கம் விதமாக மாநில திட்டக் குழு தயாரித்த பொருளாதார ஆய்வறிக்கையை சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.

தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கை தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள இலச்சினையில் (Logo) ரூபாய் சின்னத்தை குறிக்கும் தேவநாகிரி மற்றும் ரோமானிய எ...