இந்தியா, மார்ச் 14 -- சென்னை போரூர்- பூந்தமல்லி இடையே வரும் டிசம்பர் மாதம் மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்படும் என நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்து உள்ளார்.

தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கி உள்ளது. 2023 ஆம் ஆண்டில் நிதியமைச்சராக பதவியேற்ற பிறகு தென்னரசுவின் இரண்டாவது பட்ஜெட் தாக்கல் இதுவாகும். 2021ஆம் ஆண்டு பொறுப்பேற்ற திமுக தலைமையிலான அரசின் 4வது பட்ஜெட் இதுவாகும். நாளைய தினம் வேளாண் பட்ஜெட்டை வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் தாக்கல் செய்கிறார். பட்ஜெட் மீதான விவாதம் மார்ச் 17-ம் தேதி தொடங்குகிறது.

மெட்ரோ ரயில் சேவை குறித்த அறிவிப்புகளை தமிழ்நாடு நிதிநிலை அறிக்கையில் அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டார். அதில், பெருகி வரும் நகரமயமாதலில் மிக முக்கியமான தேவையாக பேருந்து புறநகர் இரயில்வே மற்ற...