இந்தியா, மே 31 -- நாகப்பட்டினத்தில் அமைந்து உள்ள தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தில் (TNJFU), 2025-26 கல்வி ஆண்டுக்கான இளங்கலைப் பட்டப் படிப்புகளில் சேர்வதற்கான ஆன்லைன் விண்ணப்ப செயல்முறை வரும் ஜூன் 2ஆம் தேதி தொடங்க உள்ளது

ஆர்வமுள்ள மற்றும் தகுதியான மாணவர்கள் பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். என அப்பல்கலைக்கழகம் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஆன்லைன் விண்ணப்பம் 02.06.2025 காலை 10:00 மணி முதல் தொடங்கும் எனவும், விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி 27.06.2025 மாலை 5:00 மணி என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

2025-26 கல்வி ஆண்டில் மொத்தம் 398 இளங்கலைப் பட்டப் படிப்புகளுக்கான இடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் பல்வேறு ஒதுக்கீடுகள் அடங்கும்:

பல்கலைக்கழகம் வழ...