இந்தியா, ஏப்ரல் 24 -- தமிழ்நாடு சட்டப்பேரவையில் எடப்பாடி பழனிசாமி அவர்களை வணங்கி என்று சொல்லி செங்கோட்டையன் உரையைத் துவங்கியிருக்கிறார். இதனால் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாகவே அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும் செங்கோட்டையனுக்கும் மோதல்போக்கு நிலவி வந்தது. இதற்கு முக்கியக் காரணமாக, ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிடக்கூடாது என எடப்பாடி பழனிசாமி அறிவித்ததே காரணம் எனக் கூறப்பட்டது.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக களம் கண்டு இருந்தால், சோர்ந்துபோயிருந்த அதிமுக நிர்வாகிகள் உற்சாகமாகியிருப்பர் என செங்கோட்டையன் நினைத்ததாகக் கூறப்படுகிறது. இதனாலேயே இருவருக்கும் கருத்து முரண்பாடு ஏற்பட்டு, ஒன்றாக எந்த நிகழ்விலும் கலந்துகொள்வதில்லை என சொல்லப்பட்டது.

அதை உறுதிப்படுத்துவதுபோன்று, எடப்பாடி பழனிசாமியின் வீட்டி...