இந்தியா, ஏப்ரல் 26 -- ஏப்ரல் 30-க்குள் தமிழ்நாடு அமைச்சரவை மாற்றம் செய்யப்படலாம் என மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன் தெரிவித்து உள்ளார்.

தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றம் உறுதியாகி உள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு, சட்டப்பேரவை கூட்டத்தொடர் முடிந்த பின்னர், வரும் ஏப்ரல் 30-க்குள் அமைச்சரவையை மாற்றத் திட்டமிட்டுள்ளது. அமைச்சர் செந்தில் பாலாஜியின் பதவி சட்ட சிக்கல்களால் ஆட்டம் காண்கிறது, மேலும் பொன்முடியும் பதவியிலிருந்து வெளியேற்றப்படலாம் என தனியார் ஊடகம் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் மூத்த பத்திரிக்கையாளர் குபேந்திரன் தெரிவித்தார்.

"செந்தில் பாலாஜி ஜாமீனா, பதவியா என முடிவெடுக்க வேண்டிய இக்கட்டான சூழலில் உள்ளார்," என குபேந்திரன் கூறினார். உச்ச நீதிமன்றத்தில் அவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள், அமைச்சராக இருப்...