இந்தியா, மே 7 -- தமிழகத்தில் 2025-2026 ஆம் கல்வி ஆண்டிற்கான பொறியியல் படிப்பில் மாணவர்கள் சேருவதற்கான விண்ணப்பப் பதிவை உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் இன்று (மே 07) தொடங்கி வைத்தார். பொறியியல், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையும் தொடங்கியது. இதற்கான விண்ணப்பப் பதிவு இணையதளங்கள் அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டுள்ளது.

பொறியியல் படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் www.tneaonline.org என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

மேலும் படிக்க | 'முன்கூட்டியே வெளியாகும் +2 தேர்வு முடிவுகள்! எந்த இணையதளத்தில் பார்ப்பது! முழு விபரம் இதோ!

தமிழகத்தில் உள்ள 176 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 159 பாடப்பிரிவுகளில் மொத்தம் 1,25,345 சேர்க்கை இடங்கள் உள்ளன. மாணவர்கள் www.tngasa.com என்ற இணையதளம்...