இந்தியா, ஏப்ரல் 27 -- தமிழக ஆழ்கடலில் எண்ணெய், எரிவாயு எடுக்க ஓஎன்ஜிசிக்கு அனுமதி அளிக்கப்பட்டதற்கு மீனவர்கள், சுற்றுச்சூழல் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன.

தமிழ்நாட்டின் ஆழ்கடல் பகுதிகளில் எண்ணெய் மற்றும் எரிவாயு எடுக்க மத்திய எரிசக்தி இயக்குநரகம், ஓஎன்ஜிசி நிறுவனத்துக்கு அனுமதி வழங்கி உள்ளது. கன்னியாகுமரிக்கு அருகே மூன்று கடல் பகுதிகள் மற்றும் சென்னைக்கு அருகே ஒரு கடல் பகுதி உள்ளிட்ட நான்கு வட்டாரங்களில், 32,485 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் இந்தப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

மேலும் படிக்க:- 'மத்திய அரசு பணிகளில் சேருவோருக்கு தமிழக அரசே முட்டுக்கட்டைப் போடுவதா?' விளாசும் அன்புமணி ராமதாஸ்!

கடந்த ஜனவரி 2024 இல் ஒன்பதாவது சுற்று ஏலம் வெளியிடப்பட்டு, நாடு முழுவதும் 1,36,596 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் 828 வட்டாரங்களுக்கு ஏலம் அறிவிக...