இந்தியா, ஏப்ரல் 15 -- நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு மாணவர்களிடையே ஏற்பட்ட தகராறில் சக மாணவரை மற்றொரு மாணவர் அறிவாளால் வெட்டியதில் அவருக்கு தலை கழுத்து உட்பட பல்வேறு இடங்களில் அரிவாள் வெட்டு விழுந்தது. இதை தடுக்க முயன்ற ஆசிரியை ஒருவருக்கும் காயம் ஏற்பட்டது. இச்சம்பவம் குறித்து வேதனை தெரிவித்துள்ள பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், இத்தகைய நிகழ்வுகளை பார்க்கும் போது தமிழகம் எங்கே செல்கிறது? என்ற கவலை தான் ஏற்படுகிறது என்று கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் உள்ள பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்த மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட சண்டையில், ஒரு மாணவரை இன்னொரு மாணவர் அரிவாளால் வெட்டியிருப்பதும், அதைத் தடுக்கச் சென்ற ஆசிரியருக்கு லேசான காயம...