இந்தியா, ஜூலை 30 -- தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் அடுத்த ஆண்டில் நடைபெற இருப்பதை முன்னிட்டு, மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என புரட்சி பயணத்தை சட்டப்பேரவை எதிர்கட்சி தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தமிழ்நாடு முழுவதும் மேற்கொண்டு வருகிறார்.

இதையடுத்து இந்த பயணத்தில் பகுதியாக சிவகங்கை மாவட்டத்துக்கு வருகை தந்துள்ள எடப்பாடி பழனிசாமி, கடந்த சில நாள்களுக்கு முன் காவல்துறையால் கொடூரமாகத் தாக்கி மரணம் அடைந்த திருப்புவனம் மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் இல்லத்துக்கு சென்றார். அங்கு அவரது தாயாரை சந்தித்து ஆறுதல் கூறினார்.

இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, "மக்களை பாதுக்காக்ககூடிய காவல்துறையால், விலைமதிக்க முடியாத ஒரு உயிரை இழந்திருக்கிறோம். இது வேதனையையும், வருத்தத்தையும் அளிக்கிறது. நகை மா...