இந்தியா, மார்ச் 25 -- டாப் 10 தமிழ் நியூஸ் 25.03.2025: தமிழ்நாடு முழுவதும் நிகழ்ந்த முக்கிய சம்பவங்களின் தொகுப்பை இன்றைய காலை பொழுதின் டாப் 10 செய்தித் தொகுப்பில் சுருக்கமாக காணலாம்.

தமிழ்நாட்டில் ஏப்ரல் 1ம் தேதி முதல் 40 சுங்கச் சாவடிகளில் கட்டணம் உயர்கிறது. வானகரம், சூரப்பட்டு, நல்லூர், பரனூர், பட்டரைபெரும்புதூர், ஆத்தூர் உள்ளிட்ட 40 சுங்கச் சாவடிகளில் ரூ.5 முதல் ரூ25 கட்டணம் உயர்த்தப்படவுள்ளது. மீதமுள்ள சுங்கச் சாவடிகளில் செப்டம்பர் 1ம் தேதி முதல் கட்டணம் உயர்த்தப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. மீதமுள்ள சுங்கச் சாவடிகளில் செப்டம்பர் 1ம் தேதி முதல் கட்டணம் உயர்த்தப்பட வாய்ப்பு என கூறப்படுகிறது.

கொடநாடு கொலை கொள்ளை வழக்கில், கொடநாடு எஸ்டேட்டின் முன்னாள் பங்குதாரரும், ஜெயலலிதாவின் முன்னாள் வளர்ப்பு மகனுமான சுதாகரனுக்கு சி.பி.சி.ஐ...