இந்தியா, ஏப்ரல் 16 -- யாருக்கு எப்போது அதிர்ஷ்டம் அடிக்கும் என்பதே தெரியாது. ஏதாவது அதிசயம் நடந்து வாழ்க்கையில் முன்னேற மாட்டோமா? கோடீஸ்வரர் ஆகமாட்டோமா? என்ற ஏக்கம் அனைவருக்கும் உண்டு. ஒருவருக்கு எல்லாம் சரியாக நடந்தால் "அவனுக்கு என்னப்பா அதிர்ஷ்டகாரன்"னு சொல்வாங்க. அதிர்ஷ்டத்தை தேடிதான் ஒவ்வொருவரும் அலைந்து கொண்டிருக்கிறோம். ஒருகட்டத்தில் வெறுத்துபோகும் போது, "அதிர்ஷ்டம் அது இஷ்டத்துக்கு வரும், போகும்னு" பேசுபவர்களை பார்த்திருப்போம். அப்படி அதிர்ஷ்டத்திற்காக ஏங்குபவர்களுக்கு வரபிரசாதமாக அமைந்ததுதான் இந்த ராசிக்கல்.

நவமணிகள் ஒவ்வொன்றும் நவகிரகங்களின் அம்சமாக இருக்கின்றன. நவமணிகளை அணிவதன் மூலம் நவகிரகத்தின் நல்ல தன்மைகள், கதிர் வீச்சுகளாய் நம் உடலில் ஊடுருவி சமநிலைப்படுத்துவதோடு அதிர்ஷ்டங்களையும் கொடுக்கும் என்பது ஜோதிட நம்பிக்கையாக இருந்...