இந்தியா, ஜூன் 15 -- நவகிரகங்களில் தளபதி பதவியை வகித்து வருபவர் செவ்வாய் பகவான். இவர் தன்னம்பிக்கை வீரம், விடாமுயற்சி, வலிமை உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். செவ்வாய் பகவான் 45 நாட்களுக்கு ஒரு முறை ராசி மாற்றத்தை செய்யக்கூடியவர். இவர் விருச்சகம் மற்றும் மேஷம் ராசிகளின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார்.

ஜோதிட சாஸ்திரத்தின்படி நவகிரகங்கள் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களது ராசி மற்றும் நட்சத்திர இடமாற்றத்தை செய்வார்கள் இது 12 ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.

இந்நிலையில் செவ்வாய் பகவான் கடந்த ஜூன் 7ஆம் தேதி அன்று சிம்ம ராசிக்கு சென்றார். இது சூரிய பகவானின் சொந்தமான ராசியாகும். செவ்வாய் பகவானின் சிம்ம ராசி பயணம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுத்தாலும் குறிப்பிட்டு சில ராசிகளுக்கு பணக்...