இந்தியா, மார்ச் 16 -- உங்களின் தன்னம்பிக்கையை வளர்க்கும் சிறப்பான வழிகள் என்ன?

நம்மைப்பற்றி நமக்கே தெரியாத நாட்கள் இருந்தது. நமது திறன்கள் குறித்து நமக்கே கேள்விகள் எழலாம் அல்லது தன்னம்பிக்கையாக உணராமல் இருக்கலாம். இது அனைத்துமே பொதுவான ஒன்றுதான். ஆனால் உண்மை என்பது அனைவரும் தன்னம்பிக்கையுடன்தான் பிறந்திருக்கிறோம். நீங்கள் அதை கொஞ்சம் கொஞ்சமாக வளர்த்துக்கொள்ள முடியும். ஒவ்வொரு நாளும் அதற்கான முயற்சிகள் தேவை. அதற்கு நீங்கள் பெரிதாக ஒன்றும் செய்துவிடவேண்டாம். சிறிய பழக்கங்களை நீங்கள் ஏற்றுக்கொள்ளவேண்டும். அது உங்களுக்கு உங்களையே நம்ப படிப்படியாக உதவும். தன்னம்பிக்கையை வளர்க்க நீங்கள் என்ன செய்யவேண்டும்?

நாம் சில சிறிய வெற்றிகளை கொண்டாட நினைப்பதில்லை. ஆனால் அந்த சிறிய வெற்றிகளைக் கூட கொண்டாடவேண்டும். நாம் முடித்துவிட்ட பணிகள், தனிப்பட்ட வள...