இந்தியா, மார்ச் 6 -- தனுஷுடன் அறிமுகமான நடிகர் அபிநய்க்கு கல்லீரல் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. மேல்சிகிச்சைக்கு பண உதவி கேட்டு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

துள்ளுவதோ இளமை, தாஸ், என்றென்றும் புன்னகை போன்ற பல படங்களிலும், பல முன்னணி விளம்பரங்களிலும் நடித்த நடிகர் அபிநய் கிங்கர் (43), லிவர் சிரோசிஸ் (Liver Cirrhosis) எனப்படும் கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார். இதுவரை ரூ.15 லட்சத்துக்கும் மேல் செலவு செய்து சிகிச்சைப் பெற்று வரும் அவர், மேல் சிகிச்சைக்காக ரூ.28.5 லட்சம் உதவி கேட்டு வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

சினிமா என்பது ஒரு மாய உலகம். இங்கு எல்லாமே வெற்றியைப் பொறுத்தே, ஒருவரது மதிப்பு நிலைநிறுத்தப்படுகிறது. அதனாலேயே ஒருவர் நல்ல பெயர் மற்றும் புகழுடன் நடிகராக இருக்கும்போதே சம்பாதித்து வைத்துக்கொள்ள வேண்டும் என்று...