இந்தியா, ஏப்ரல் 20 -- தனுஷின் 50வது படமான ராயனை இயக்கி நடித்த பின் அவர் அடுத்ததாக இட்லிக் கடை படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். டான் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படம் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஏப்ரல் 10ம் தேதி வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் பின் அக்டோபர் 1 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.

மேலும் படிக்க| இட்லி கடை பட ரிலீஸை உறுதி செய்த தனுஷ்! தேதி குறிச்சு வெளியான அறிவிப்பு

இந்தப் படத்தில் தனுஷ், நித்யா மேனனுடன் அருண் விஜய், ஷாலினி பாண்டே, பிரகாஷ் ராஜ், சமுத்திரகனி, ராஜ்கிரண் உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகின்றனர். ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். அத்துடன், இட்லி கடை படத்தில் மனதை வருடும் பல கிராமிய பாடல்கள் இடம்பெற்றிருப்பதாக ஜி.வி. பிரகாஷ் முன்னதாக கூறி இருந்தார்.

இந்தப் படத்தின் ஷீட்டிங், த...