இந்தியா, மார்ச் 31 -- தனியார், சிறுபான்மையினர் அல்லாத கல்வி நிறுவனங்களில் எஸ்சி, எஸ்டி, ஓபிசி பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்க சட்டம் கொண்டு வர வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கல்வி, பெண்கள், குழந்தைகள், இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழு சட்டப்பிரிவு 15(5)-ஐ அமல்படுத்த புதிய சட்டம் இயற்றப் பரிந்துரைத்துள்ளது.

பிரிவு 15 (5) சிறுபான்மை கல்வி நிறுவனங்களைத் தவிர, பொது மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீடு உட்பட சமூக மற்றும் கல்வி ரீதியாக பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினரின் முன்னேற்றத்திற்காக சிறப்பு ஏற்பாடுகளை சட்டத்தின் மூலம் செய்ய அரசை அனுமதிக்கிறது.

கடந்த மக்...