இந்தியா, மார்ச் 23 -- உலக தண்ணீர் தினத்தை கொண்டாடிக்கொண்டிருக்கும் நேரத்தில் தமிழகத்தில் தண்ணீரின் நிலை எப்படி உள்ளது என்று பாருங்கள்.

இதுகுறித்து சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர் மருத்துவர் புகழேந்தி கூறியதாவது

இந்தியாவில் தமிழகத்தின் நிலப்பரப்பு 4 சதவீதம் உள்ளது. இதில் 6 சதவீதம் மக்கள் உள்ளனர். ஆனால் நீர்நிலைகள் 2.5 சதவீதம்தான் உள்ளது. தனி நபர் உபயோகிக்கும் நீரின் அளவு இந்தியளவில் 2,200 லிட்டர் கியூப் என்று உள்ள நிலையில் தமிழகத்தில் அதன் அளவு 900 அல்லது 800 லிட்டர் கியூப் தான் உள்ளதாக பல்வேறு ஆய்வுகள் கூறுகின்றன. எனில் நாம் தண்ணீரை கவனமாக கையாள வேண்டும்.

சென்னையில் உள்ள முக்கிய நீர் ஆதாரங்களில் ஹெவி மெட்டல்கள் அதிகம் உள்ளது என்று ஆய்வுகள் கூறுகின்றன. சென்னையில் ஐஐடி அண்மையில் நடத்திய ஆய்வில், வாந்திபேதியை ஏற்படுத்தும் ஈக்கோலை எனும் பாக்ட...