இந்தியா, மார்ச் 14 -- ஹோலியை கொண்டாடும் வேளையில் ஒவ்வொரு முறை நீங்கள் வண்ணத்தை மற்றவர்கள் மீது பூசி மகிழும்போது, குளுமையாக குடிப்பதற்கு ஒரு பாரம்பரிய பானமாக தண்டை என்ற பானம் உள்ளது. ஹோலியன்று பரிமாறப்படும் தண்டையை செய்வது எப்படி என்று பாருங்கள். இதற்கு முதலில் தண்டை மசாலாவை தயாரித்துக்கொள்ளவேண்டும். இதற்கு பிரதான உட்பொருளாக பால் உள்ளது.

* சர்க்கரை - ஒன்னேகால் கப்

* முந்திரி - அரை கப்

* பிஸ்தா - அரை கப் (முழுமையாக) (துருவியது - அரை கப்)

* குங்குமப்பூ - இரண்டு சிட்டிகை (பாலில் ஊறவைத்துக்கொள்ளவேண்டும்)

* பாதாம் - அரை கப் (ஊறவைத்து தோலை உறித்து எடுத்துக்கொள்ளவேண்டும்)

* சோம்பு - கால் கப்

* முலாம் பழ விதைகள் - கால் கப்

* மிளகு - அரை டேபிள் ஸ்பூன்

* ஜாதிக்காய்ப் பொடி - கால் ஸ்பூன்

* ஏலக்காய் - 2

* ஃபுல் கிரீம் மில்க் - அரை லிட்டர்

ம...