இந்தியா, மே 28 -- சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நாள்தோறும் நிர்ணயம் செய்யப்படுகிறது. இந்தச் சூழலில் தங்கம் விலையில் கடந்த சில நாட்களாக ஏற்றம், இறக்கம் காணப்பட்டது.

இந்த நிலையில், சென்னையில் நேற்று (மே 27) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.360 அதிகரித்து ஒரு சவரன் ரூ.71,960க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த சூழலில் இன்று (மே 28) சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்துள்ளது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை மற்றும் வெள்ளியின் இன்றைய விலை நிலவரம் குறித்து பார்ப்போம்.

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (மே 28) சவரனுக்கு ரூ.480 குறைந்து ஒரு சவரன் ரூ.71,480-க்கு விற்கப்படுகிறது. ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் வ...