இந்தியா, ஏப்ரல் 18 -- வெளியூர் பயணங்கள் செல்லும்போது, கடைகளில் கிடைக்கும் உணவுகள் தரமற்றதாக இருக்கும் என்று சிலர் எப்போதும் வீட்டில் தயாரித்த உணவுகளை உடன் எடுத்துச்செல்வார்கள். ஆனால் சில நேரங்களில் நீண்ட தூர பயணங்களுக்கு எடுத்துச்செல்லும் உணவுகள் கெட்டுவிடுகின்றன. டிஃபன் வெரைட்டிகளான இட்லி, பூரி, சப்பாத்தி ஆகியைவை கெடாது. ஆனால் அதற்கு எடுத்துச்செல்லும் சைட்டிஷ்கள் கெட்டுவிடும். அதற்கு ஏற்ற தக்காளி கார தொக்கு செய்து ரெசிபி இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. இதை எப்படி செய்வது என்று பாருங்கள்.

* நல்லெண்ணெய் - 6 டேபிள் ஸ்பூன்

* கடுகு - கால் ஸ்பூன்

* பொடியாக நறுக்கிய பூண்டு - கால் கப்

* வர மிளகாய் - 2

* கறிவேப்பிலை - ஒரு கொத்து

* மிளகாய்த் தூள் - 2 ஸ்பூன்

* மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்

* தக்காளி - 4

* உப்பு - தேவையபன அளவு

* புளிக்கரைசல் - சிறி...