இந்தியா, ஏப்ரல் 7 -- தக்காளி மட்டும் இருந்தால் போதும் மணமணக்கும் இதுபோன்ற ஒரு தக்காளி குருமாவை செய்துகொடுத்தீர்கள் என்றால், அனைவரும் கடகடவென இட்லி, தோசைகளை காலி செய்வார்கள். இதை செய்தால் பார்ப்பதற்கே அத்தனை கவர்ச்சியாக இருக்கும். பரிமாறினால் இன்னும் நன்றாக இருக்கும். காலையில் ப்ரேக் பாஸ்ட் செய்வதற்கு எப்போது ஒரே மாதிரியான ப்ரேக் ஃபாஸ்ட் ரெசிபிகளை செய்யாமல் இதுபோன்ற ரெசிபிக்களையும் செய்துகொடுங்கள். அவர்கள் விரும்பி சாப்பிடுவார்கள்.

* தக்காளி - கால் கிலோ

* எண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்

* பட்டை - 1

* சோம்பு - கால் ஸ்பூன்

* கறிவேப்பிலை - ஒரு கொத்து

* பெரிய வெங்காயம் - 1 (நீளவாக்கில் நறுக்கியது)

* பூண்டு - 10 பல்

* உப்பு - தேவையான அளவு

* சாம்பார் தூள் - 3 ஸ்பூன்

* கரம் மசாலா அல்லது கறி மசாலா - ஒரு ஸ்பூன்

* இட்லி மாவு - கால் கப்

அல்லது...