இந்தியா, ஏப்ரல் 11 -- தமிழ் சினிமாவில் இசையமைப்பாளர்களுக்கு என்று தனி ரசிகர்கள் எப்போதும் இருந்து வருகின்றன. ஆரம்ப காலத்தில் இருந்த விஸ்வநாதன் தொடங்கி தற்போது உள்ள அனிருத் மற்றும் பல ஆல்பங்களுக்கு இசையமைத்த இசையமைப்பாளர்கள் வரை ரசிகர்களின் மனதை ஆட்கொண்டு வருகின்றார்கள். அந்த அளவிற்கு பாடல்கள் என்றால் அனைவருக்கும் மிகவும் பிடித்த ஒன்றாக இருந்து வருகிறது. அதிலும் குறிப்பாக பழைய பாடல்களும் ரசிகர்களை எப்போதும் விட்டு விலகாது இருந்து வருகிறது. அதற்கு எடுத்துக்காட்டாக சமீப காலத்தில் வெளியாகி வரும் சில படங்களில் பழைய பாடல்களை ஒளிபரப்பி ரசிகர்களின் வரவேற்பை பெற்று வருகின்றனர். அந்த வகையில் நேற்று வெளியான குட் பேட் அக்லி திரைப்படத்திலும் சில பழைய பாடல்கள் இடம் பெற்றுள்ளன. இந்த படத்தின் டிரைலர் வீடியோவிலேயே ஒத்த ரூபாயும் தாரேன் என்ற பழைய பாடல் இடம்...