இந்தியா, மார்ச் 23 -- HR பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ரியா ஷிபு தயாரிப்பில் இயக்குநர் எஸ். யூ. அருண் குமார் இயக்கத்தில், சீயான் விக்ரம், எஸ். ஜே. சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு, துஷாரா விஜயன் உள்ளிட்ட பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'வீரதீர சூரன் பார்ட் 2.

வரும் 27 ஆம் தேதி வெளியாகும் இந்த ' படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு மற்றும் பட வெளியீட்டுக்கு முன்னரான விளம்பரப்படுத்தும் நிகழ்வு ஹைதராபாத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் சீயான் விக்ரம், எஸ் ஜே சூர்யா, துஷாரா விஜயன், நடிகர் பிருத்விராஜ், தயாரிப்பாளர், விநியோகஸ்தர் என்.வி.ஆர் சினிமாஸ் என்.வி.பிரசாத் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தயாரிப்பாளர் பிரசாத் பேசுகையில், '' வீர தீர சூரன் படம் சிறப்பாக தயாராகி இருக்கிறது. நடித்திருக்கும் கலைஞர்கள் அனைவரும் கஷ்டப்பட்டு உழைத்து உருவாக்க...